ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

#Afghanistan
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது கோஸ்ட் நகரத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானாலும் பெருத்த உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி விட்டது. 

இந்த நிலநடுக்கத்தினால் 1,500 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஆயிரக்கணக்கான மண் வீடுகள் தரைமட்டமாகின. தகவல் தொடர்புகள் முடங்கின. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

ஈரான், கத்தாரில் இருந்து 2 விமானங்களில் மனிதநேய உதவிப் பொருட்கள் வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் உதவிக்கரம் நீட்டியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!