அர்ஜெண்டினாவில் அதிகரித்த எரிபொருள் விலை-ஆர்ப்பாட்டத்தில் லாரி ஓட்டுனர்கள்
#Protest
Prasu
2 years ago

அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டில் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியை மறித்துள்ளார்கள்.
அங்கு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஓட்டுனர்கள், எரிபொருளின் விலையானது, திடீரென்று அதிகமாக உயர்ந்திருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.



