ஆயுத கும்பலுடனான மோதல்-காவல்துறையினர் உட்பட 12 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் காவல்துறையினர் மற்றும் ஆயுத கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். இதில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடப்பதும் உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ என்ற மாகாணத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்ததால் ராணுவ வீரர்களின் குழு சோதனை பணியை மேற்கொண்டிருந்தது.
அந்த குழுவினர் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாகாணத்தில் இருக்கும் எல் சால்டோ என்னும் நகரத்தின் ஒரு குடியிருப்பில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
எனவே, காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், குற்றவாளிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையினர் நான்கு பேரும் இந்த மோதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



