3-ஆம் மாடியிலிருந்து விழுந்த வாகனம் - இருவர் மரணம்

#China #Accident #Death
Prasu
2 years ago
3-ஆம் மாடியிலிருந்து விழுந்த வாகனம் - இருவர் மரணம்

சீன நாட்டின் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாம் மாடியிலிருந்து வாகனம் விழுந்ததில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் நியோ என்னும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமானது பிரபலமானது.  இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் 3-ஆம் மாடியில் ஒரு மின்சார வாகனத்தில் இருந்து இரண்டு பேர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த வாகனம் ஜன்னலை உடைத்து, கட்டிடத்தை விட்டு பாய்ந்து கீழே வந்து விழுந்தது.

இதில் வாகன சோதனை பணியிலிருந்த இரண்டு பணியாளர்களும் பரிதாபமாக பலியாகினர்.  இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அந்நிறுவனம் ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. மேலும் நிறுவனத்தின் சார்பாக வாகனத்தால் விபத்து நிகழவில்லை என்று உறுதிப்படுத்தும்  அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!