இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிப்பு

Nila
2 years ago
இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு  நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

பிரதிநிதிகள் குழு இலங்கையில் ஒரு வார காலம் தங்கியிருந்து பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலைமை குறித்து பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாகக் கூறிய ஜனாதிபதி, கடினமான காலங்களில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!