ஏழு வருடங்களாக காணாமல் போயிருந்த குள்ள யானை உடவளவைக்கு திரும்பியுள்ளது
Prathees
2 years ago

2013 ஆம் ஆண்டு உடவலவை தேசிய பூங்காவில் முதன்முதலில் காணப்பட்ட அரிய குள்ள யானை 2021 ஆம் ஆண்டு அப்பகுதிக்கு வராத காரணத்தினால் காணாமல் போயுள்ளதாக வதந்தி பரவியுள்ளது.
இந்த குள்ள யானை சமீபத்தில் உடவளவ பகுதிக்கு திரும்பியுள்ளமை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த குள்ள யானை கல்தோட்டை, பலாங்கொடை உள்ளிட்ட பெரும் பகுதியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த குள்ள யானை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், ஜூன்-ஜூலை மாதங்களில் குள்ள யானை அப்பகுதிக்கு வராததாலும், கண்காணிப்பில் சிக்காததாலும் காணாமல் போனதாக நாட்டில் வதந்தி பரவி வருவதாகவும் வனவிலங்கு உயர் பாதுகாப்பு வலய அதிகாரி ஜி. விதானகே தெரிவித்தார்.



