இலங்கையில் இருந்து பயனில்லை என்று கூறிய மகன் இறுதிப்பயணம் சென்றுவிட்டான்: கதறியழுத தந்தை

Prathees
2 years ago
இலங்கையில் இருந்து பயனில்லை என்று கூறிய மகன்  இறுதிப்பயணம் சென்றுவிட்டான்: கதறியழுத தந்தை

கடவுச்சீட்டு எடுப்பதற்காக வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு செல்வதற்காக  தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எடுப்பதற்காக  வரிசையில் காத்திருந்த இளைஞன் நிலக்கரி ஏற்றிச் சென்ற கண்டெய்னர்  லொறியுடன் மோதி  உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புத்தேகம, கிரலோகம, தலகொலவெவ பகுதியைச் சேர்ந்த எம். பி ரவிஷான் மதுரங்க என்ற 19 வயதுடைய இளைஞனே  இவ்வாறு உயிரிழந்தவர் 

புத்தளம் - அனுராதபுரம் ஏ12 வீதியில் பந்துலகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வரிசையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இளைஞனின் மோட்டார் சைக்கிளின் கைப்பிடி கண்டெய்னர் வாகனத்தின் உடலுடன் மோதி வீதியில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நேற்று முன்தினம் (23) இரவு வீட்டில் இருந்து வெளியேறி வவுனியா செல்வதற்கு தேவையான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் வாழ்ந்து பயனில்லை. எமக்கு எதிர்காலம் இல்லை. நான் இந்த நாட்டில் தொடர்ந்து வாழ்ந்தால் பட்டினியால் சாக வேண்டியிருக்கும் என தனது மகள் கூறியதாக உயிரிழந்தவரின் தந்தை நிமல் பண்டார கதறி அழுதார்.

நேற்று (24) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!