எதிர்வரும் வாரம் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பான அறிவிப்பு

Nila
2 years ago
எதிர்வரும் வாரம் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பான அறிவிப்பு

கடந்த வாரம் திறக்கப்படாத நகர பாடசாலைகள் இந்த வாரம் முதல் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி செவ்வாய்கிழமை, புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் திறக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரை திறக்கப்படல் வேண்டும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பான கல்வி அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2022 ஜூன் 27 முதல் 2022 ஜூலை 1 வரையிலான வாரத்தில் கீழ்க்கண்டவாறு பாடசாலைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற பாடசாலைகள் 2020/06/20 முதல் 2022/06/24 வரை இடம்பெற்றமை போன்று நாளைமறுதினம் 27ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதிவரை வழக்கம் போல் நெகிழ்வான நேர அட்டவணையுடன் இடம்பெறவேண்டும்

நகர்ப்புறங்களில் கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள் வாரத்தில் 3 நாள்கள் அதாவது செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் காலை 07.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். இப்பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.

மாணவர்களின் வருகை இல்லாத நாள்களில் இணைவழி கற்பித்தல், வீட்டிலிருந்து பணிகள் அடிப்படையிலான செயல்பாடுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும்.

போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்த நாள் தனிப்பட்ட விடுப்பாகக் கருதப்படாது.
20/206/206 முதல் 2022/06/24 வரை போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையை நடாத்துவதற்கு பங்களித்த அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு மரியாதை செலுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!