630 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!
#SriLanka
#Fuel
#Arrest
Prasu
2 years ago

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்படிருந்த 630 லீற்றர் டீசல் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
3 கொள்கலன்களில் இவை வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அதனை களஞ்சியப்படுத்திய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.



