தீவக பகுதி உதவி கல்வி பணிப்பாளரின் அவசர மனித நேய கோரிக்கை
#SriLanka
#School
#Student
#Food
Prasu
2 years ago

தீவக கல்வி வலய முன்பள்ளி மாணவர்களின் 80%ற்கு மேற்பட்டோர் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
அத்துடன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக முன்பள்ளி சிறார்கள் உணவு மற்றும் போசாக்கு பிரச்சனையால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே குறித்த விடயத்திற்கு தற்காலிக தீர்வாக முன்பள்ளிகளிற்கு அருகாமையிலுள்ள இந்து,கிருஸ்தவ ஆலயங்கள் பொது அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் உறவுகளின் உதவிகளை பெற்று சமைத்த உணவு,போஷாக்கான சிற்றுண்டிகள் போன்றவற்றை மனவர்களிற்கு வழங்குவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து முன்பள்ளி கோட்ட இணைப்பாளர்கள் முன்னப்பள்ளி ஆசிரியர்கள்,முகாமைத்துவ குழுக்கள் விரைவாக செயற்பட்டு எமது குழந்தை செல்வங்களை காக்க உரிய செயற்திட்டத்தை அமுல்படுத்த உதவுங்கள்.




