நோர்வே கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
#GunShoot
#Death
Prasu
2 years ago

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேளிக்கை விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



