பெயரை மாற்றிக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ள எலான் மஸ்கின் மகள்

#ElonMusk
Prasu
2 years ago
பெயரை மாற்றிக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ள எலான் மஸ்கின் மகள்

எலான் மஸ்கின் திருநங்கை மகள் தனது பெயரை மாற்றிக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் எலான் மஸ்க் ஒருவராவார். இவருக்கு 18 வயதுடைய மகன் உள்ளார். அவருடைய பெயர் சேவியர்  அலெக்ஸாண்டர் மஸ்க். இவரது பாலினம் ஆண் என்று பிறப்பின் அடிப்படையில்  இருந்தாலும் சமீபத்தில் அவர் திருநங்கை மகளாக உள்ளார், 

இனி தான் தன்னுடைய  தந்தையுடன் வசிக்கப்போவதில்லை மற்றும் அவருடன் தொடர்பில் இருக்க போவதில்லை என்பதை உறுதிசெய்ய தன்னுடைய பெயரை மாற்ற விரும்புவதாகவும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.  

அவருக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதியின்படி அவர் விவியன் ஜென்னா வில்சன் என்று  தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். இதனை அடுத்து மஸ்க்  மற்றும் அவரது திருநங்கை மகளுக்கு இடையே குடும்ப பிரச்சனை இருப்பதாக சொல்லப்பட்டாலும்கூட, இது தொடர்பாக எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

விவியன் ஜென்னா வில்சலின்  அம்மா ஜஸ்டின் வில்சன் ஆவார். இவரை எலான் மஸ்க் கடந்த 2008-ம் ஆண்டு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மஸ்கிற்கு , மொத்தம் எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

அதிலொருவர் சமீபத்தில் தான் உயிரிழந்துள்ளார். எலான் மஸ்க் முன்னதாக திருநங்கைகளுக்கு ஆதரவாக வெளியிட்டிருந்த ட்வீட்கள் தற்போது பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. அந்த ட்வீட் ஒன்றில், தன்னை திருநங்கை என்ற அடைமொழியுடன் ஒருவர் அடையாளப்படுத்துவது மனக் கிளர்ச்சியினால் செய்யும் செயல் என்று விமர்சித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!