கிழக்கு லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றில் 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்

Kanimoli
2 years ago
 கிழக்கு லண்டனில் உள்ள இரவு விடுதி ஒன்றில் 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்

தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள டவுன்ஷிப்பில் இரவு விடுதி ஒன்றில் 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ் விடுதியில் நேற்று இரவு பலர் கூடியிருந்த நிலையில், இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காண உறவினர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சடலங்கள் மாநில சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் என கிழக்கு கேப் மாகாண சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் சியந்த மனனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உடனடியாக பிரேத பரிசோதனையில் ஈடுபட உள்ளோம், அதனால் மரணத்திற்கான சாத்தியமான காரணத்தை நாங்கள் அறிய முடியும்," என்று கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா, 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுக்கடையில் கூடுவதற்கு அனுமதிக்கப்படும் சூழ்நிலைகள் குறித்து தான் கவலைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களது மர்ம மரணம் பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய தகவல்கள் இது வரை வெளியாகவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!