உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் அடுத்தடுத்து நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் ரஷ்ய படையினர் இன்று நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
இதன் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவர் Andriy Yermak, தெரிவித்துள்ள தகவலில், ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் மழலையர் பள்ளி ஒன்று முற்றிலுமாக தகர்த்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைனிய அமைச்சர் Oleksiy Goncharenko அவரது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலில், முதல் நிலை தகவலின் அடிப்படையில் 14 ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கீவ்விற்கு உட்பட்ட பகுதியில் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் தெரிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏவுகணையால் தாக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக தெரிவந்துள்ளது.
மேலும் கீவ் மேயர் Vitali Klitschko தெரிவித்த தகவலில், 7 வயது சிறுமி உட்பட இரண்டு நபர்கள் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 5ம் திகதிக்கு பிறகு உக்ரைனிய தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.