பாகிஸ்தானில் தேயிலை செலவை குறைக்க மக்கள் லஸ்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது
#Pakistan
Prasu
2 years ago
பாகிஸ்தான் நாட்டின் உயர்கல்வி ஆணையமானது நிதி நெருக்கடியால் தேயிலை செலவை குறைக்க மக்கள் லஸ்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டிருப்பதால் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டினுடைய உயர்கல்வி ஆணையமானது பணி வாய்ப்பை அதிகரிக்க மற்றும் தேயிலை இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்க புதிய ஆலோசனையை கூறியிருக்கிறது.
அதாவது, நாட்டு மக்கள் டீ குடிப்பதற்கு பதிலாக சட்டு சர்பத்து, லஸ்ஸி போன்ற உள்ளூர் பானங்களை அருந்த வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதன் மூலம் தேயிலை இறக்குமதி செலவை குறைக்கலாம் என்று தெரிவித்திருகிறது.