குஜராத் மாநிலத்தின் சமூக செயல்பாட்டாளர் கைது - ஐ.நா அதிகாரி கண்டனம்
குஜராத் மாநிலத்தின் சமூக செயல்பாட்டாளராக இருக்கும் டீஸ்டா செடல்வாட் என்பவர் கைதானதை ஐ.நாவின் ஒரு அதிகாரி கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடத்தில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், குஜராத் வன்முறை வழக்கில் போலியான ஆதாரங்களின் மூலமாக வழக்கு தொடுத்தார் என்று குஜராத் மாநிலத்தின் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் கைதாகியுள்ளார். இந்நிலையில் ஐநாவின் ஒரு அதிகாரி இதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான சிறப்பு அறிக்கையாளரான மேரி லாலர், “டீஸ்டா செடல்வாட் வெறுப்பு, பாரபட்சங்களுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுப்பவர். மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது குற்றம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.