ஜோர்டனில் நச்சு வாயு கசிவால் 12 பேர் உயிரிழப்பு(வீடியோ உள்ளே)

ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் டாங்குகள் ஏற்றப்பட்டது. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் டாங்க் மேலிருந்து விழுந்து வெடித்தது.
இதில், பெரியளவில் மஞ்சள் நச்சு புகை வெளியேறியது. இதனால், இந்த விபத்தில் அங்கு இருந்த கப்பல்துறை பணியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகபா துறைமுகத்தில் மதியம் 3.15 மணிக்கு குளோரின் டாங்க் விழுந்து வெடித்தது. இதனால் வாயு கசிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியால், துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றினர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் துறைமுகத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
At least 10 people have died and more than 250 injured after a toxic gas leak at Aqaba Port in Jordan. pic.twitter.com/kjTDaPkelw
— Suzanne (@suzanneb315) June 27, 2022



