மோடியின் தோளை தட்டி வரவேற்ற ஜோ பைடன்(வீடியோ உள்ளே)

ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி தனது அருகில் நின்று கொண்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
Biden walks upto PM Modi at G7 Summit, shows bonhomie between leaders of democratic world
— ANI Digital (@ani_digital) June 27, 2022
Read @ANI Story | https://t.co/aKIgknrbsW#JoeBiden #PMModi #G7Summit #PMModiInGermany pic.twitter.com/E9DHcgyorT
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை தேடி, அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றார். மோடியின் பின்பக்கத்திலிருந்து தோளை தட்டி அழைத்த பைடன்,
தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பைடனை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற பிரதமர் அவருடன் கைகுலுக்கி பதிலுக்கு வாழ்த்து கூறினார்.



