உக்ரைனை தாக்கிய வீடியோவை அதிகாரபூர்வமாக வெளியிட்ட ரஷ்யா

உக்ரைன் நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர், தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு ரஷ்யாவை அலற செய்திருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கெர்சன் மற்றும் மரியுபோல் போன்ற முக்கியமான நகர்களை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டது. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும் உக்ரைன் படையினரும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, அந்நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர் அதிகாரபூர்வமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
??Ukraine: More footage of this strike has been released by Ukrainian SSO (SOF), who claim the destruction of the whole column of 6x 9P140, fuel trucks and transloaders, as well as APC and IFV.
— Eng yanyong (@EngYanyong) June 27, 2022
Regardless of the final losses, certainly a serious strike. #StopRussia pic.twitter.com/kSyGoPp96P
அதில், எரிபொருள் டிரக்குகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரான்ஸ்லோடர்களை அழிக்கும் காட்சி இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ரஷ்ய நாட்டினுடைய மிகவும் முக்கிய காலாட்படை கவச மீட்பு வாகனங்களான APC and IFV எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைன் நாட்டின் தாக்குதல்களில் இது ஒரு மைல்கல் மற்றும் மிக பயங்கர தாக்குதல் என்று கூறப்பட்டிருக்கிறது.



