கழிவறைக்கு சென்ற பல்கலைக்கழக மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஜெஸ் டேவிஸ்(20) என்பவர் 12ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர் வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் இது மாதவிடாய் காண அறிகுறி என நினைத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் ஜெஸ் டேவிஸ்க்கு கர்ப்பம் உண்டாவதற்காக எந்த அறிகுறியும் இல்லை. முக்கியமாக பேபி பம்ப் இல்லை. இது குறித்து அவர் தெரிவிக்கும் போது எனது மாதவிடாய் சுழற்சி எப்போதும் ஒழுங்கற்ற முறையில் இருக்கும். அதனால் தான் உண்மையில் இதனை கவனிக்கவில்லை. எனக்கு சில சமயங்களில் குமட்டல் மட்டும் ஏற்பட்டது. நான் புதிய மருந்து சாப்பிட ஆரம்பித்தேன். பிறகு அதையும் நிறுத்திவிட்டேன். என் வாழ்க்கையின் மிகவும் அதிர்ச்சியான சம்பவம் இது என்று தெரிவித்தார்.
மூன்று கிலோ எடை கொண்ட அந்த ஆண் குழந்தை இன்குபேட்டரில் தற்போது வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 35 வாரங்களில் இவருக்கு குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் நலமுடன் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.



