கொழும்பு மக்களுக்கு காத்திக்கும் ஆபத்து -உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்!

Nila
2 years ago
கொழும்பு மக்களுக்கு காத்திக்கும் ஆபத்து -உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முடங்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் வார இறுதியிலிருந்து பெருமளவு காலியாகி விட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பதில்லை என முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் எரிபொருள் விநியோகத்தை மேலும் மட்டுப்படுத்தியதால், தங்களுக்கு வரும் பொருட்கள் மேலும் தாமதமாகலாம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், டெலிவரிக்கு வாரம் அல்லது 15 வாரங்களுக்கு ஒருமுறை வரும் விநியோகத்தர்கள், வாரக்கணக்கில் வராததால், சிறு மளிகை கடைக்காரர்களும் பொருட்கள் இன்றி கடையை மூடும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலை இன்னும் சில தினங்களுக்கு நீடித்தால் மக்கள் அன்றாட உணவுப் பொருட்களுக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!