மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

#SriLanka #Tamil Nadu #Refugee
மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் இருந்து  மேலும் 4  பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள்  அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வவுனிய மாவட்டத்தை சேர்ந்த  டோமினிக் (42), அவரது மனைவி சுதர்சனி(24) அவரது ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50) ஒள்ளிட்ட 4 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 05.00 மணி அளவில் தனுஸ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

மணல் திட்டில் சுமார் 4 மணிநேரமாக சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் படகில் சென்று  இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 96 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!