சிறுவர் துஷ்பிரயோக செய்திகளை ஊடகங்களில் வெளியிட வேண்டாம்- மஹிந்த யாப்பா
Prabha Praneetha
2 years ago

70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலூம், பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பொது மக்களுக்கு தெளிவூட்டுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



