மஹிந்த ராஜபக்ஷ உயிருக்கு ஆபத்தான நிலையில்? போலியான செய்தியால் சர்ச்சை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலை முதல் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகிக் கொண்டுள்ளது.
எனினும் போலியான தகவல்கள் வெளியாகி உள்ளதாக மஹிந்தவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போலியான தகவல்களை பகிர்வதற்கு முன்னர் தயது செய்த அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவசர சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் விசேட பிரமுகர் அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



