இலங்கைக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதியளித்தது அமெரிக்கா
Prabha Praneetha
2 years ago

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசியபோதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.



