சில வார காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் ரயில் பயணங்கள் இரத்து!!
Prabha Praneetha
2 years ago

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடியின் காரணத்தினால் ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க போக்குவரத்து வசதி இல்லாததால், சில ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனால், ரயில் மூலம் அலுவலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச துறை ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 30 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினமும் பல ரயில் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் ரயில்களில் பயணிப்பதால், ஒரு ரயிலில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



