நோட்டோ அமைப்பின் உறுப்பினராக சுவீடன் மற்றும் பின்லாந்தை வரவேற்ற பைடன்

Prasu
2 years ago
நோட்டோ அமைப்பின் உறுப்பினராக சுவீடன் மற்றும் பின்லாந்தை வரவேற்ற பைடன்

நேட்டோ அமைப்பின் நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றது. 

இந்நிலையில் மேட்ரிட் நகரில் நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோ அமைப்பில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த அமைப்பில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பை  கைவிட்டது. 

இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். இந்த நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற இரு நாடுகள் இணைவதில் இருந்த துருக்கியின் எதிர்ப்பு விலகியுள்ளது.

இதற்கான முத்தரப்பு நாடுகளுடனான கையெழுத்து  ஒன்று ஒப்பந்தம் ஆனது. இதனை முன்னிட்டு அமெரிக்கா நாட்டு அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன்  வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது, “சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் தகுதி வாய்ந்த ராணுவங்களை கொண்ட வலிமை வாய்ந்த ஜனநாயக நாடுகள். 

அவர்கள் நேட்டோவின் உறுப்பினராவது அதன் கூட்டு பாதுகாப்புக்கு வலிமை சேர்க்கும்.  மேலும் சுவீடன், பின்லாந்து மற்றும் துருக்கி போன்ற  நாடுகள் மேற்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!