பாகிஸ்தான் நாட்டிற்கு 2.5பில்லியன் டாலர் நிதிஉதவி வழங்கும் சீனா
#China
#Pakistan
#Dollar
Prasu
2 years ago
அதிகமான பணவீக்கம், அந்நியசெலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றால் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. இந்தநிலையில் சீனாவானது தன் அந்நியசெலாவணி கைஇருப்பை அதிகரிப்பதற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு 2.5பில்லியன் டாலர் நிதிஉதவியை வழங்குகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் நிதியையும், குறைந்து வருகிற அந்நியசெலாவணி கையிருப்பையும் அதிகரிப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன் முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்டதை அடுத்து, சீனாவின் இந்த உதவி தொடர்பாக அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.



