இன்றையவேத வசனம் 01.07.2022: நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் குடிக்கும்போதெல்லாம், கர்த்தர் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்

நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் குடிக்கும்போதெல்லாம், கர்த்தர் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 11:26
ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11இன் ஈகிள் லூனார் மாட்யூல் முதன்முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியபோது, விண்வெளி பயணிகள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தங்கள் விமானத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தனர்.
விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் கொண்டு வர அனுமதி பெற்றார். அங்ஙனம் அவர் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார்.
வேதத்தைப் படித்த பிறகு, சந்திரனில் உண்ட முதல் உணவாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பார். அவர் “எங்கள் தேவாலயம் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் திராட்சை ரசத்தை ஊற்றினேன்; நிலவின் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பில் திராட்சரசம் மெதுவாகவும் அழகாகவும் கோப்பையின் பக்கமாக மிதந்தது” என்று எழுதுகிறார்.
ஆல்ட்ரின் இந்த பரலோக திருவிருந்தை அனுபவித்தபோது, அவரது நடவடிக்கைகள், சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது இரண்டாவது வருகையின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது.
அப்போஸ்தலனாகிய பவுல், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” (1 கொரிந்தியர் 11:23) தம் சீஷர்களுடன் இயேசு எப்படி அமர்ந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ளும்படி நம்மை ஊக்குவிக்கிறார்.
கிறிஸ்து விரைவில் பிட்கப்படப்போகிற தன்னுடைய சரீரத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார் (வச.24). அவர் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நமது மன்னிப்பையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திய “புதிய உடன்படிக்கையின்” அடையாளமாக திராட்சை ரசத்தை அறிவித்தார் (வச.25). எப்பொழுதும், எங்கும் நாம் திருவிருந்தை எடுத்துக்கொண்டாலும், இயேசுவின் பலியின் உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகையின் மீதான நம்பிக்கையையும் நாம் அறிவிக்கிறோம் (வச. 26).
நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உயிர்த்தெழுந்தவரும் மீண்டும் வரப்போகிறவருமான ஒரே மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டாடலாம்.



