ஜூலை 31 ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும்

Kanimoli
2 years ago
 ஜூலை 31 ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும்

எதிர்வரும் 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

இந்நிலையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கூறுகையில்,

ஜூலை மாதம் 06 ஆம் திகதி 3,700 மெட்ரிக் தொன் ஏற்றிய முதலாவது எரிவாயு கப்பல் வருகிறது.

ஜூலை 10 ஆம் திகதி 3,700 மெட்ரிக் தொன் ஏற்றிய மற்றுமொரு கப்பல் வருகிறது. அவற்றுக் தேவையான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில கப்பல்கள் ஜூலை 16,20,22,24,27 மற்றும் 31 ஆம் திகதிகளில் வரவுள்ளன. ஜூலை 31 ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!