இலங்கையில் காஸ் வாங்க வரிசையில் நிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

அளுத்கம, களுவாமோதர கந்த விகாரையை அண்டிய பாடசாலை மைதானத்தில் லாஃப்ஸ் காஸ் ஒரு தொகுதியை விநியோகிப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அளுத்கம காவற்துறையினர் தலையிட்டுள்ளதாக லாஃப்ஸ் கம்பனியின் பிராந்திய விநியோக பிரிவு அறிவித்துள்ளது..
எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக பெருமளவிலான மக்கள் வந்திருந்ததாகவும், 900 12 கிலோ எரிவாயு தாங்கிகள் மற்றும் 400 கிலோ 5k எரிவாயு தாங்கிகள் விநியோகிக்கப்பட்டதாகவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அளுத்கம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பல வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளும் எரிவாயுவை கொள்வனவு செய்ய வருகை தந்திருந்ததுடன் தொலைதூரங்களில் இருந்தும் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
காஸ் வாங்க வந்தவர்களின் கூட்ட நெரிசலால் வீதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் பெருமளவிலான வாகனங்கள் வருகை தந்துள்ளதாக பலரும் தெரிவித்தனர்.



