முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.
இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.