எஞ்சலோ மெத்தியூஸிற்கு கொவிட் தொற்று உறுதி
#Srilanka Cricket
#Covid 19
Prasu
2 years ago

இலங்கை அணியின் வீரர் எஞ்சலோ மெத்தியூஸ் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அவர் ஏனைய குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



