இரு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள வாவியில் குதித்த தாய்! 5 வயது மகள் உயிரிழப்பு
Mayoorikka
2 years ago

எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது இரு பிள்ளைகளுடன் தாய் வாவியில் குதித்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



