அவுஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ள ‘கோ கோட்டா கோ’ வியாபார நிலையம்

Nila
2 years ago
அவுஸ்திரேலியாவில் திறக்கப்பட்டுள்ள ‘கோ கோட்டா கோ’ வியாபார நிலையம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பிராந்தியத்தில் Berwick நகரில் விசேட வர்த்தக நிலையம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த வர்த்தக நிலையத்திற்கு Go Gota Go என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையம் தொடர்பாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையம், Berwick நகரில் உள்ள இலங்கை உணவகமான அம்புல என்ற உணவகத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

Go Gota Go என்ற இந்த வர்த்தக நிலையம் இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் கோட்டா கோ ஹோம் என்ற வாசகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் போராட்டகாரர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு பகுதிக்கு கோட்டா கோ கம என்ற பெயரிட்டுள்ளனர்.

இலங்கையில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரித்தானியா, அமெரிக்க உட்பட பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!