கனரக லொறி ஒன்று வீதியை விட்டுவிலகி ஆற்றில் விழுந்து விபத்து
Kanimoli
2 years ago

கனரக லொறி ஒன்று வீதியை விட்டுவிலகி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு-வவுணதீவு வலையிறவு பாலத்தருகில் கனரக லொறி ஒன்று வீதியை விட்டுவிலகி வலையிறவு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் இன்று(01) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியால் இரண்டு லொறிகள் ஒன்றாக சென்றுள்ளன. ஒரு லொறியை மற்றைய லொறி முந்திச்செல்ல முற்பட்ட போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் குடைசாய்ந்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



