எரிபொருள் நெருக்கடி முண்டியடிக்கும் மக்கள்

Kanimoli
2 years ago
எரிபொருள் நெருக்கடி முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கமைய கிளிநொச்சியில் கடந்த காலங்களில் பழைய இரும்புக்களுக்காக விற்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களை தற்போது மக்கள் முண்டியடித்து வாங்குவதை காணக்கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் துவிச்சக்கர வண்டிகளை மக்கள் தங்களுடைய போக்குவரத்துகளுக்கு பயன்படுத்தி இருந்தாலும் நாளடைவில் அவற்றை கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில் பாவணையில் வைத்திருந்த துவிச்சக்கர வண்டிகள் பழுதடைந்த மற்றும் ஓரளவு பாவிக்கக்கூடியதாக காணப்பட்ட போதும் அவை பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகளவானோர் துவிச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை 70 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது.

கிளிநொச்சியில் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் உதிரிப்பாகங்களையும் மக்கள் முண்டியடித்து கொள்வனவு செய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!