பாடசாலை மாணவர்கள் பயணித்த லொறியின் தரைப் பலகை உடைந்து விழுந்ததில் 13 பேர் காயம்
Kanimoli
2 years ago

பாடசாலை மாணவர்கள் பயணித்த சிறிய லொறியின் தரைப் பலகை உடைந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வழமையான பேருந்துகள்பயணிக்காததால் மாணவர்கள் லொறியில் பாடசாலைக்கு செல்ல நேர்ந்ததையடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறிய லொறியின் பின்னால் 30 மாணவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த மாணவர்கள் கலென்பிந்துனுவெவ மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



