நாட்டை அழித்தவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: பேராயர் மெல்கம் ரஞ்சித்
Prathees
2 years ago

இலங்கைக்கு இந்த பொருளாதார அழிவை ஏற்படுத்தியவரைக் கண்டுபிடிக்க முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ராகம வைத்தியசாலையில் அமைந்துள்ள இயேசுவின் தெய்வீக இருதய தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த ஆராதனை நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாடு முற்றிலும் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறிய கார்தினல், இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் மிகவும் அநாதரவாகியுள்ளனர் என்றார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தமது கடமைகளை ஒழுங்காகச் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், இந்த நிலை இன்று உழைக்கும் மக்களையும் பாதித்துள்ளதாகவும் கர்தினால் தெரிவித்தார்.



