ஓமான் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு: இலங்கைக்கு உதவி வழங்குவதாக உறுதியளிப்பு

#Gotabaya Rajapaksa
Mayoorikka
2 years ago
ஓமான் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு: இலங்கைக்கு  உதவி வழங்குவதாக உறுதியளிப்பு

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீட் அல் ரஷீட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக தனது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நேற்று  (01) கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஓமானில் இலங்கையிலுள்ள பயிலுநர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓமானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் நாட்டில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!