சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்
Mayoorikka
2 years ago

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் கலாநிதி ஷம்மி குரே ஆகியோருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



