மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டியது அவசியம்! சஜித் பிரேமதாஸ
Mayoorikka
2 years ago

நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டதாகவும், இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை உடனடியாக தூக்கி எறிந்து, மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டியது இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மக்களின் பணத்தை கொள்ளையடித்த வண்ணம் மேற்கொள்ளப்பட்ட அழிவை நிறுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துப் பணத்தையும் நாட்டிற்கு கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



