இலங்கை அரசாங்கத்தின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்

நாட்டில் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நீண்டகாலத்திற்கு மக்களை வரிசைகளில் காத்திருக்கவைத்து, எரிபொருள் விநியோகத்தை எந்தவொரு தனியார் நிறுவனத்திடமேனும் ஒப்படையுங்கள் என்று மக்களை அவர்களது வாயினால் கூறவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. அதன்மூலம் நாட்டின் முக்கிய வளங்களை தனியார்மயப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்துவருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக தற்போது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், படுகுழிக்குள் விழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு மட்டம் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு, அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.



