கந்தகாடு மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு இராணுவத்தினர் கைது
Prathees
2 years ago

அநுராதபுரம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நிலையத்தில் பணிபுரியும் இரண்டு இராணுவ சிப்பாய்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ம் திகதி இரவு பெண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் கடந்த 29ஆம் திகதி காலை சுமார் 600 கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டு பிரதான கதவுகளையும் உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.



