முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடு - இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட தென்னிலங்கையர்கள்!

#SriLanka #Mullaitivu #Police
முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடு - இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட தென்னிலங்கையர்கள்!

சட்ட விரோதமான முறையில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு முள்ளியவளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புதையல் தோண்டும் முயற்சி
தென்னிலங்கையைச் சேர்ந்த (WP) வாகன இலக்கத் தகட்டினைக் கொண்ட வான் ஒன்றில் ஸ்கான் இயந்திரங்களுடன் சட்ட விரோதமாக புதையல் தோண்ட முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு சிலர் சென்றிருப்பதாக முள்ளியவளை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கைது
அதனையடுத்து அப்பகுதி இராணுவத்தினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வித்தியாநத்தா வித்தியாலய பாடசாலையின் அருகில் வெள்ளை நிற வான் ஒன்று சந்தேகத்திற்கடமாக நின்றதை இராணுவத்தினர் அவதானித்துள்ளனர்.

அதனை சேதனை மேற்கொண்டதை அடுத்து ஸ்கானர் இயந்திரங்களும் அதில் பயணித்த 10 பேரயும் இராணுவத்தினர் கைது செய்து முள்ளியவளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!