இன்றைய வேத வசனம் 03.07.2022: பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 03.07.2022: பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

இன்றைக்கு சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு பலர் பல காரணங்களை சொல்லலாம்.

அவையெல்லாம் ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே. ஆனால் அது சாதாரண பனிப்பாறை அல்ல, அது பனிமலை என்பது யாருக்குத் தெரியும்.

அத்தனை குற்றத்தின் ஆரம்பமும், துவக்கமும் ஒரு சிறிய தவறில் தான் நடக்கிறது.
தன்னுடைய மகன் பக்கத்து வீட்டு பையனை அடித்துவிட்டு வந்தால் எத்தனை தாய் தன் மகனை கண்டிப்பார்கள், எத்தனை தாய்மார்கள்" பையன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்" என்று தட்டி கழித்து, அவன் செய்த தவறை மறைப்பார்கள்.

தன் மகனின் அத்துமீறிய செயலை கண்டிக்காமல், தவறு செய்யும்போது தண்டிக்காமல் விட்டு விட்டதின் விளைவினால் இன்றைக்கு அந்த குற்றம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தன் மகன் செய்தது தவறு என்று தெரிந்தபோது அதை கண்டிக்காமல் விட்டதால் ஒரு தாயின் மனசாட்சி மடங்கடிக்கப்படுகிறது.

பின்னர், அவர்கள் மனசாட்சி மழுங்கி போகிறது. பின்னர் மனசாட்சி செத்துப் போகிறது. மனசாட்சி செத்துப்போன பின்பு நாம் செய்யும் தவறோ, குற்றமோ அல்லது கொடூரமான செயலோ பெரிய பாவமாகவோ, குற்றம் செய்பவனாகவோ நம் கண்களுக்கு தெரியாது,

ஒருவேளை அந்த தாய் தன்னுடைய மகனை கண்டித்திருந்தால் அவர்கள் மனசாட்சியும் உணர் வோடு இருந்திருக்கும்.

மகனும் தன்னுடைய செயலை தவறு என்று உணர்ந்து அதை செய்யாமல் இருந்திருக்க வாய்ப்பு கிடைத்து, அவன் மனசாட்சியும் உணர்வோடு இருந்திருக்கும்.

தங்கள் மனசாட்சிக்கு செவிகொடுக்காமல், தங்கள் சுயநலத்திற்காக செயல்படுவதின் விளைவே, இன்றைக்கு இந்தியா முழுவதும் காணப்படும் அத்தனை குற்றச் செயலுக்கும் காரணம், இன்றைக்கு காணப்படும் ஆலமரம் போன்ற அத்தனை குற்றங்களுக்கு நீங்கள் வித்திட்ட விதையே காரணம்,

"அந்த விதை என்பது உங்கள் மனசாட்சியை கொலை செய்வது". பல வாலிபர்கள் தங்கள் பெற்றோர் கண்டிக்கும்போது அல்லது அறிவுரை சொல் லும்போது, அவை Torture என்று கருதி அதை உதாசீனப்படுத்துவதும், இன்றைக்கு ஏற்படும் பல் பிரச்சனைகளுக்கு காரணம் ஆகும்.

அந்த கண்டிப்பை ஏற்க மறுத்ததால் இன்றைக்கு ஒரு பெரிய பாதிப்பையும், அவமானத்தையும் சந்திக்க காரணமாக இருக்கிறது.

இன்றைக்கு உங்கள் மனசாட்சியின் நிலை என்ன ? உணர்வற்ற மனசாட்சியா ! அல்லது உணர்வுடைய உயிருள்ள மனசாட்சியா ?

நீதிமொழிகள் 22:6
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!