255,000 பாதுகாப்பு படையினருக்கு 373 பில்லியன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் முறைப்பாடு

வடக்கில் இருந்து 16 இராணுவப் படையணிகளை மீளப் பெறுவதற்கு புலம்பெயர் விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படையணிகளுக்கு பெருமளவான பணத்தை அரசு செலவு செய்வதன் காரணத்தினாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலோபாய மையங்களில் நிலைகொண்டுள்ள இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிப்பதாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, இந்தப் படையணிகளை பராமரிப்பதன் காரணமாக அரசாங்கத்தின் டொலர் கையிருப்பு குறைந்துள்ளதாகவும், இம்முறையும் 255,000 பாதுகாப்பு படையினருக்கான பாரிய தொகையான 373 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகது.
இது 2022 மற்றும் 2023 க்கு இடையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக புலம்பெயர் புலிகள் அமைப்பு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைபாடுகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்கவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.



