யுவதி ஒருவர் அலையில் சிக்கி பலி
#SriLanka
#Death
#Lanka4
Shana
2 years ago

பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடல் அலையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக ஏனைய நபர்களுடன் வந்த அவர், ஹோட்டலுக்குப் பின்புறமாக உள்ள கடற்கரையில் உலாவச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கடவத்த, பியன்வில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



