காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான நடிகர் ஜாக்சன் அந்தோணி தீவிரசிகிச்சைப் பிரிவில்
Prathees
2 years ago

பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோணியின் வாகனம் நேற்று இரவு தலாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த அவர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கழுத்தில் இரண்டு எலும்புகள் சேதமடைந்துள்ளதாகவும், நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இதேவேளை, இந்த விபத்தில் சமன் அந்தோணியும் படுகாயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மற்றொருவரின் தலையில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும், அது பாரதூரமானதாக இல்லை எனவும் அனுராதபுரம் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



