நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kanimoli
2 years ago
நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்த மேலும் 51 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 51 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டது.

இன்று காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபட்ட 06 பேர் உட்பட 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்


இதேவேளை , கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் காவல்துறையினரால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 24 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

அதிக பணம் ஈட்டுவதற்காக, கடத்தல்காரர்கள் அப்பாவிகளை ஏமாற்றி, பாதுகாப்பற்ற கப்பல்களைப் பயன்படுத்தி இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே, ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட்டு உயிரைப் பணயம் வைத்து சட்டத்தின் முன் பலியாவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!